என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அண்ணா கிராம வடக்கு ஒன்றிய .தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்: கண்டரக்கோட்டையில் நடைபெற்றது
- அண்ணாகிராம வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் கண்டரக்கோட்டையில் நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் நாகபூஷ்ணம் தலைமை தாங்கினார்.
கடலூர்:
அண்ணாகிராம வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் கண்டரக்கோட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் நாகபூஷ்ணம் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கவுரி பாண்டியன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் எம்.சி.சம்மந்தம் முன்னிலை வகித்தனர். அண்ணாகிராம ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி மற்றும் கிளைக் கழகங்களில் அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்ப்பது, மேலும் அ.தி.மு.க. பொதுசெயலாளராக எடப்பாடியாரை அங்கீகரித்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிப்பது எனவும், அ.தி.மு.க.வின் பொன்விழா மாநாட்டில் அதிகளவில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அனைத்து ஊராட்சி கிளைகளுக்கு உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் அவை தலைவர்கள் செல்வராஜ், பாண்டியன், மாவட்ட பிரதிநிதி விஸ்வநாதன், ஒன்றிய பொருளாளர் ஏழுமலை, ஒன்றிய துணை செயலாளர்கள் ரஜினி, உமா துரைராஜ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.