search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு
    X

    வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

    • 26 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.
    • நெடுவாக்கோட்டை பள்ளி மாணவிகள் வசீகா, ரித்திகா ஸ்ரீ, நிஷாந்தினி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.

    மன்னார்குடி:

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் துளிர் வினாடி வினா போட்டி மன்னார்குடி ஒன்றிய அளவில் நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் முனைவர்.எஸ்.அன்பரசு தலைமை வகித்தார்.

    அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் யு.எஸ்.பொன்முடி வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவரும் துளிர் வினாடி வினா மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ஆர்.கே. சரவண ராஜன் முன்னிலை வகித்தார்.

    தலைமை ஆசிரியை மா.தேவி வாழ்த்துரை வழங்கினார். மன்னார்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 26 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் வினாடி- வினா போட்டிகளில் பங்கேற்றனர். 6, 7, 8 இளநிலை பிரிவுகளில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நெடுவாக்கோட்டை மாணவிகள் தே.வசீகா, மா. ரித்திகா ஸ்ரீ, அ.நிஷாந்தினி ஆகியோர் முதல் பரிசையும், புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் ச.சிவஸ்ரீ.ரா ஹர்ஷினி, க.ஹனிஸ்காஸ்ரீ ஆகியோர் இரண்டாம் பரிசையும், மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோ. ஹரிஷ் குமார், கா.இனியன் பிரசாத், கு.தி யுகேஸ்வரன் ஆகியோர் மூன்றாம் பரிசினையும், 9, 10 ம் வகுப்பு உயர்நிலைப் பிரிவில் புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கு.சுபஸ்ரீ, பா. வைத்தீஸ்வரன், ஆர். ஹரிஹரன் ஆகியோர் முதல் பரிசினையும்.

    தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஏ.ஆர். ஹர்ஷிதா, கு. சிவகனேஷ்வர், மு. மாதேஷ் ஆகியோர் இரண்டாம் பரிசினையும், பரவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் டி. தேச தேவன், டி. கிஷோர் ஆகியோர் மூன்றாம் பிரச்சினையும் பெற்றனர். 11,12ஆம் வகுப்பு மேல்நிலை பிரிவில் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பி.பிரசன்ன வெங்கடேஷ், ஆர்.வி. ஸ்ரீராம், ஜி. மோகேஷ் ஆகியோர் முதல் பரிசையும், பரவக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் டி. பிரவீன், ஆர்.சூரிய பிரகாஷ், எம் சரவணா ஆகியோர் இரண்டாம் பரிசினையும் பெற்றனர்.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவர்கள் வரும் 29ம் தேதி திருவாரூர் கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான துளிர் வினாடி வினா போட்டிக்கு பங்கேற்கத் தகுதி பெறுகின்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மன்னார்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் டி. தனபால் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்திப் பேசினார். நிறைவாக அறிவியல் இயக்க செயலாளர் டி.இமானுவேல் நன்றி கூறினார்.

    Next Story
    ×