search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தந்தத்திற்காக ஆண் யானை கொல்லப்பட்டதா? வனத்துறையினர் விசாரணை
    X

    தந்தத்திற்காக ஆண் யானை கொல்லப்பட்டதா? வனத்துறையினர் விசாரணை

    • 60 மீட்டர் தொலைவில் ஆண்யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்தது.
    • யானை உடல்நல க்குறைவால் இறந்து உள்ளதா? அல்லது தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டதா? என வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை வனச்சர கத்திற்கு உட்பட்ட பெரிய தடாகம் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தடாகம் காப்பு காட்டிற்கு வெளியே 60 மீட்டர் தொலைவில் ஆண்யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்தது.

    மேலும், யானையின் வலது தந்தம் காணாமல் போயிருந்தது. இடது தந்தம் மட்டும் இருந்தது. இது குறித்து ரோந்து சென்ற வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், வனத்துறையினர் யானை இறந்தது குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    யானை உடல்நல க்குறைவால் இறந்து உள்ளதா? அல்லது தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டதா? என வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், அங்கு தோண்டப்பட்டு இருந்த குழியில் விழுந்து யானை இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், யானையின் உடற்கூராய்வை இன்று நடத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதன் பின்னர் யானை இறப்புக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    யானை இறந்தது குறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:-

    வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை அழுகிய நிலையில் இருந்து உள்ளது. மேலும் யானையின் தந்தம் ஒன்று மாயமாகி உள்ளது. யானையின் கண் இல்லாமல் குழி விழுந்து காணப்பட்டது. யானையை யாராவது கண்களுக்காகவும், தந்தத்தி ற்காகவும் வேட்டையாடி இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. யானை அழுகிய நிலையில் இருப்பதால் அது இறந்து பல நாட்கள் இருக்கலாம். வனத்து றையினர் யானைகள் ஊருக்குள் புகாமல் இருக்க இரவு பகலாக ரோந்து செல்லும் வனத்து றையினருக்கு பல நா ட்களுக்கு முன்பு இறந்து போன யானையின் உடல் எவ்வாறு கண்ணில் படாமல் போனது.

    யானை இறந்து அழுகிய துர்நாற்றம் வீசி இருக்கும், யானைகள் கூட்டம் ஒரு யானை இறந்ததும் பிளிறல் சத்தத்தை எழுப்பி இருக்கும். இதனை வனத்துறையினர் கவனிக்காமல் விட்டு விட்டனர்.

    யானைகள் அழிந்தால் காடுகள் அழிந்து விடும், மற்ற விலங்குகள் வனப்பகுதியில் இருக்காது. எனவே வனத்துறை உயர் அதிகாரிகள் யானையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×