search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரி பேரூராட்சி சார்பில் சிலம்ப போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு
    X

    பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பரிசு வழங்கிய போது எடுத்த படம்.

    ஆறுமுகநேரி பேரூராட்சி சார்பில் சிலம்ப போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு

    • 10 மணி நேரம் 10 நிமிடங்கள் 10 வினாடிகள் சிலம்பம் சுற்றுவதற்காக விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டன.
    • சாதனை இலக்கை எட்டியவர்களின் பெயர் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் என்கிற உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

    ஆறுமுகநேரி:

    சிலம்ப கலையில் சாதனை படைப்பதற்கான நிகழ்ச்சி கடந்த மாதம் நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பங்கேற்க கூடிய இந்த போட்டியில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 125 பேர் கலந்து கொண்டனர்.

    இவர்கள் தொடர்ந்து 10 மணி நேரம் 10 நிமிடங்கள் 10 வினாடிகள் சிலம்பம் சுற்றுவதற்காக விதிமுறைகள் நிர்ண யிக்கப்பட்டன. இதன்படி சாதனை இலக்கை எட்டியவர்களின் பெயர் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் என்கிற உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

    இந்த போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த ஆறுமுகநேரியை சேர்ந்த 2-ம் வகுப்பு பயிலும் மாணவர் நிகித் நாத், மாணவி சிவஹரித்ரா ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஆறுமுகநேரி பேரூராட்சி மன்றத்தின் சார்பில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாண சுந்தரம் ஆகியோர் கேடயங்களை பரிசாக வழங்கினர்.

    ஸ்ரீ ஆரியா மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமியின் சிலம்ப பயிற்சியாளர் மாரிமுத்து உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×