என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சங்ககிரி ரெயில் நிலையத்தில் 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்15 May 2023 3:21 PM IST
- ரெயில் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- பறக்கும் படை தாசில்தார் ராஜேஸ்குமார், வருவாய் ஆய்வாளர் குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் அலுவலர்கள் சங்ககிரி ரெயில் நிலையத்தில் ரோந்து சென்று கண்காணித்தனர்.
சேலம்:
சங்ககிரியில் இருந்து ரெயில் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படை தாசில்தார் ராஜேஸ்குமார், வருவாய் ஆய்வாளர் குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் அலுவலர்கள் சங்ககிரி ரெயில் நிலையத்தில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது ரெயில் நிலைய நடைபாதையில் கேட்பாரற்று கிடந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் மொத்தம் 700 கிலோ ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக வைத்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, அதை கடத்த முயன்றவர்கள் குறித்து அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×