என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிங்காநல்லூரில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
- லட்சக்கணக்கில் பணம் தப்பியது
- வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை :
கோவை சிங்காநல்லூர்-திருச்சி ரோட்டில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.
சம்பவத்தன்று இரவு இந்த ஏ.டி.எம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் பணம் எடுக்க முடியாததால் அவர்கள் திரும்பிச் சென்றனர். மறுநாள் பணம் எடுப்பதற்காக சென்ற வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து வங்கி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஏ.டி.எம் மையத்துக்கு வங்கி அதிகாரிகள் வந்து பார்த்தபோது, பணம் கொள்ளை போகவில்லை என்பதும், ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்கமுடியாமல் மர்ம நபர்கள் விட்டு சென்றதால், லட்சக்கணக்கில் பணம் தப்பியதும் தெரியவந்தது.
இது குறித்து வங்கி அதிகாரி சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் ஏ.டி.எம்.மையத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டிவி காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.