search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில், தொடர்ந்து 24 மணிநேரம் சிலம்பம் சுற்றி சாதனை முயற்சி
    X

    சீர்காழியில், தொடர்ந்து 24 மணிநேரம் சிலம்பம் சுற்றி சாதனை முயற்சி

    • தொடர்ந்து இரண்டு மணி நேரம் பல்வேறு வகையான சிலம்பம் சுற்றி உலக சாதனை.
    • 6 முதல் 60 வயது வரை உள்ள சிலம்பம் கற்றவர்கள் ஒரே இடத்தில் கூடி இம்மாபெரும் உலக சாதனையை நிகழ்த்தினர்.

    சீர்காழி:

    சீர்காழியில் பழமை வாய்ந்த வீரத்தமிழர் சிலம்பாட்டக் கழகம் இயங்கி வருகிறது.

    இதன் நிறுவனர் மற்றும் பயிற்றுநராக சிலம்பாட்ட ஆசான் சுப்ரமணியன் இருந்து வருகிறார்.

    இம்மாணவர்கள் தமிழகம், வெளிமாநிலம் உட்பட வெளிநாட்டுகளிலும் சிம்பாட்ட போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் வீரத்தமிழர் சிலம்பாட்ட சார்பாக மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழக மாணவ, மாணவிகள் யோகேஸ்வரன் 3 விதமான ஆயுதம் 6 மணிநேரம் சுற்றியும், கலைமொழி, இனியவளவன், நித்திஸ், அண்டரசன், ஸ்ரீநிவாஸ், கிஷோர், விமல் உள்ளிட்ட 25 பேர் தனிநபர் உலக சாதனை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    6 மணி நேரம் முதல் 24 மணிநேரம் வரை ஒற்றைக்கம்பு, இரட்டை கம்பு, வாள் வீச்சு, சுருள்வாள், வேல் கம்பு, கரலாக்கட்டை உள்ளிட்ட ஆறு வகையான ஆயுதங்களை பயன்படுத்தி உலக சாதனை செய்தனர்.

    மேலும் தமிழகம் முழுவதும் இருந்து 340 சிலம்பாட்ட மாணவ, மாணவிகள் தொடர்ந்து இரண்டு மணி நேரம் பல்வேறு வகையான சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்தனர்.

    குறிப்பாக 6 வயது சிறுவன் முதல் 60 வயது வரை சிலம்பம் கற்றவர்கள் ஒரே இடத்தில் கூடி இம்மாபெரும் உலக சாதனையை நிகழ்த்தினர்.

    இவர்களின் சாத னையை ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பை சேர்ந்த ஜேக்கப்ஞா னசெல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு அங்கீகரித்து சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினர்.

    அப்போது வீரத்தமிழர் சிலம்பாட்ட கழக கௌர வத்தலைவர் சரண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×