search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு
    X

    மாநில தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு

    • கையுந்து பந்து விளையாட்டிற்கு மாணவ- மாணவிகளுக்கு வருகிற 13-ந் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
    • தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெ.டேவிட்டேனியல் வெளியிட்டுள்ள செய்திகுறி ப்பில் கூறியிருப்பதாவது;-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக வருங்காலங்களில் ஏப்ரல்-2023 முடிய நடை பெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு கொள்ள உள்ள தமிழக அணிக்கு வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்திட உத்தேசிக்கப் பட்டுள்ளது.

    ேமலும் தேர்வு போட்டிகள் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

    வளை கோல்பந்து விளையாட்டிற்கு (மாணவர்கள் மட்டும்) 13.12.22 அன்று அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் சிவகங்கையிலும், கையுந்து பந்து விளையாட்டிற்கு மாணவ- மாணவியர்களுக்கு 13.12.22 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கம் சென்னை–யிலும், கால்பந்து விளையாட்டிற்கு (மாணவிகள் மட்டும்) 13.12.22 அன்று ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் சென்னையிலும், 0 விளையாட்டிற்கு மாணவ-மாணவிகளுக்கு 14.12.22 அன்று ஜவஹர் லால் நேரு உள் விளையாட்டு அரங்கம் சென்னையிலும் நடைபெற உள்ளது. தேர்வுகள் அனைத்தும் காலை 7 மணிக்கு நடைபெறும்.

    இத்தேர்வு போட்டியில் கலந்து கொள்ள தகுதிகள், வயது வரம்பு 1.1.2004 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும்.

    ஆதார் கார்டு 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிறந்த தேதி சான்றிதழ், நகராட்சி / கிராம நிர்வாக அலுவலரிட் பெறப்பட்டதாக இருக்க வேண்டும் (ஜனவரி 2012 ஆம் ஆண்டிற்குள்ளும் 5 ஆண்டுகள் மிகாமல் இருக்க வேண்டும்).

    தேர்வு போட்டியில் கலந்து கொள்பவர்கள் போட்டி நடைபெறும் இடங்களுக்கு சென்று தங்களது பெயர்களை பதிவு செய்து தேர்வு போட்டியில் பங்கு கொள்ள வேண்டும்.

    எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், திறமையும் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மேற்கண்ட மாநில அளவிலான தேர்வு போட்டியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    கூடுதல் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட பிரிவு அலுவலக தொலைபேசி எண் 04362-235633 என்ற எண்ணிலும் மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கைபேசி எண் 7401703496 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×