search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏ.டி.எம். மையங்களில் ரகசிய காமிராக்கள் பொருத்த வேண்டும்-வங்கி அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில்  போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
    X

    கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசியதையும், அதில் பங்கேற்றவர்களையும் படத்தில் காணலாம்.

    ஏ.டி.எம். மையங்களில் ரகசிய காமிராக்கள் பொருத்த வேண்டும்-வங்கி அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு

    • விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார்.
    • ஏ.டி.எம். மையங்களிலும் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள அனைத்து வங்கி அதிகாரி களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மணிநகர் சந்திர மஹாலில் நடைபெற்றது, மாவட்ட காவல்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை தாங்கி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசியதாவது:-

    கண்காணிப்பு காமிராக்கள்

    ஏ.டி.எம் மையங்களில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் பொருட்டு வங்கி அதிகாரிகள் தங்களது வங்கி மற்றும் ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பணத்தை கண் காணிப்பதற்காக மறைமுக கண்காணிப்பு காமிராக்கள் நிறுவப்பட வேண்டும்,முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய கேமராக்கள் அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் நிறுவ வேண்டும்.

    மேலும் ஏ.டி.எம். எந்திரங்கள் உடைக்கப் படும் போது எச்சரிக்கை மணி அங்கே ஒலிக்கவும் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒலிக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.கொள்ளை யர்களின் முகம் தெளிவாக தெரியும் வகையில் ஏ.டி.எம் மையங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களையும், ரகசிய கேமராக்களையும் பொருத்த வேண்டும். அனைத்து வங்கி ஏ.எடி.எம். மையங்களிலும் பாதுகா வலர்களை நியமித்து பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்று கூறினார்.

    ஏற்பாடுகளை தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணி ப்பாளர் (பொறுப்பு)சம்பத் தலைமையிலான காவல் துறையினர் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்ெபக்டர் ராஜாராம், தாளமுத்துநகர் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி, மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×