என் மலர்
உள்ளூர் செய்திகள்

காயல்பட்டினத்தில் ஆட்டோ - மோட்டார் சைக்கிள் மோதல்- 2 பேர் படுகாயம்
- இசக்கி முத்து என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து ஆட்டோ மீது மோதினார்.
- விபத்தில் ஆட்டோ டிரைவர் ஹேம்குமார் கால் முறிந்தது. அவர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த ஹேம்குமார் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு தனது ஆட்டோவில் காயல்பட்டினத்தில் இருந்து ஆறுமுகநேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது காயல்பட்டினம் வடக்கு முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கி முத்து (30) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து ஆட்டோ மீது மோதினார்.
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் ஹேம்குமார் கால் முறிந்தது. அவர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் இசக்கி முத்துவின் பின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






