search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எட்டயபுரத்தில்  விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
    X

    பேரணியில் கலந்து கொண்டவர்கள் உறுதிமொழி எடுத்த காட்சி.

    எட்டயபுரத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

    • பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியையொட்டி சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    எட்டயபுரம்:

    எட்டயபுரத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு ஒட்டுமொத்த தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

    எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    எனது குப்பை எனது பொறுப்பு என்ற விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலமானது எட்டயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டினர். பேரூராட்சியை தூய்மையான நகரமாக முன்னெடுப்பது குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் கதிர்வேல் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×