search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விற்பனை சரிவால் களைஇழந்த அய்யலூர் ஆட்டுச்சந்தை
    X
    அய்யலூர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட செம்மறி ஆடுகள்.

    விற்பனை சரிவால் களைஇழந்த அய்யலூர் ஆட்டுச்சந்தை

    • நாட்டு கோழி 1 கிலோ ரூ.350 முதல், ரூ.400 வரையும், சேவல்கள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனையானது.
    • மேலும் அதிகாலையில் வரும் வியாபாரிகளுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஆட்டு ச்சந்தை கூடி வருகிறது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆடு, கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை க்காக கொண்டு வருகின்றனர்.

    வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் இதனை ஆர்வமுடன் வாங்கி செல்வதால் இப்பகுதி ஆடு மற்றும் கோழிகளுக்கு வரவேற்பு உள்ளது. தைப்பூசத்தை யொட்டி பழனி முருகன் கோவிலுக்கும், சமயபுரம் உள்ளிட்ட கோவில்களுக்கு பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரை சென்றனர்.

    இதனால் அவர்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துள்ளனர். இதன் காரணமாக ஆடு மற்றும் கோழிகள் விற்பனை சரிந்துள்ளது. இதனால் பரபரப்பாக காணப்படும் அய்யலூர் சந்தை களை இழந்து காணப்படுகிறது.

    இருந்த போதும் நாட்டு கோழிகள் மற்றும் சேவல்கள் ஓரளவு விற்பனையானது. நாட்டு கோழி 1 கிலோ ரூ.350 முதல், ரூ.400 வரையும், சேவல்கள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனையானது.

    தற்போது குளிர் காலம் என்பதால் குளிரை அதிகம் தாங்கும் செம்மறி ஆட்டு க்குட்டிகள் விற்பனையும் கணிசமாக இருந்தது. 10 கிலோ கொண்ட ஆடு ரூ.7500க்கு விற்பனை யானது. பல்வேறு பகுதிக ளில் இருந்து அய்யலூர் சந்தைக்கு வியாபாரிகள் வருகின்றனர்.

    தீபாவளி, பொங்கல், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகையின் போது கோடிக்கணக்கில் வர்த்தக மாகும். சாதாரண நாட்களில் ரூ.50 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை வர்த்தம் நடைபெற்று வருகிறது. எனவே சந்தையை பேரூரா ட்சி ஏற்று நடத்தினால் வருவாய் அதிகரிக்கும்.

    மேலும் அதிகாலையில் வரும் வியாபாரிகளுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் சிரமம் அடைந்து வருகின்ற னர். சாலையிலும் அதிக அளவு கூட்டம் கூடுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்ற னர். எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×