என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தென்திருப்பேரையில் பா.ஜ.க. சார்பில் அய்யப்ப ரதத்திற்கு வரவேற்பு தென்திருப்பேரையில் பா.ஜ.க. சார்பில் அய்யப்ப ரதத்திற்கு வரவேற்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/04/09/1863232-5thenthiruperai.webp)
தென்திருப்பேரையில் பா.ஜ.க. சார்பில் அய்யப்ப ரதத்திற்கு வரவேற்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அய்யப்பனின் ரதம் தமிழ்நாடு முழுவதும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் தேங்காய் உடைத்து அய்யப்பனை வழிபட்டனர்.
தென்திருப்பேரை:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைசாற்றும் முன் ஹரிவரா சனம் பாடல் பாடப்படுவது வழக்கம். இந்த பாடலை இயற்றி 100 ஆண்டுகள் நிறைவடைந்தை முன்னிட்டு அய்யப்ப சேவா சமாஜம் சார்பில் அய்யப்பனின் ரதம் தமிழ்நாடு முழுவதும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை தென்திருப்பேரைக்கு வந்த அய்யப்ப ரததிற்கு பா.ஜ.க. ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவர் குமரேசன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் தேங்காய் உடைத்தும். அபிஷேக பொருட்கள் வழங்கியும் அய்யப்பனை வழி பட்டனர். நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் மாரிதுரைசாமி, பிரசார பிரிவு மண்டல் தலைவர் ஆட்டோ சுப்பிர மணியன், கூட்டுறவு பிரிவு மண்டல் தலைவர் ஜெயசிங், அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு திரவியம், வக்கீல் பிரிவு தலைவர் கண்ணன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.