என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை மாமல்லபுரம் கடலில் கரைக்க தடை
- "பிளாஸ்டர் ஆப் பாரீஸ்" ரசாயனம் பயன்படுத்தப்படாத சிலைகள் என சிலை வைத்துள்ள அமைப்பினர் கூறி அனுமதி வாங்கியுள்ளனர்.
- நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே கொண்டு வரவேண்டும்.
மாமல்லபுரம்:
இன்று விநாயகர் சதூர்த்தி கொண்டாட வைக்கப்படும் சிலைகளை மாமல்லபுரம் கடலில் வரும் 24ம் தேதி கரைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்., செங்கல்பட்டு மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 365 சிலைகளும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின்படி "பிளாஸ்டர் ஆப் பாரீஸ்" ரசாயனம் பயன்படுத்தப்படாத சிலைகள் என சிலை வைத்துள்ள அமைப்பினர் கூறி அனுமதி வாங்கியுள்ளனர்.
இந்த சிலைகளை செங்கல்பட்டு மாவட்ட கடலோர பகுதிகளான மாமல்லபுரம், சதுரங்கபட்டினம், கடலூர், கடப்பாக்கம், பெரியகுப்பம் பகுதிகளுக்கு பக்தர்கள் கரைக்க வரும் போது சிலைகள் பரிசோதனை செய்யப்படும் அதில் ரசாயன கலவை இருப்பது தெரியவந்தால் கடலில் கரைக்க அனுமதி கிடையாது. அதேபோல் சிலைகளை மாட்டு வண்டி, மீன்பாடி ஆட்டோ, ரிக்ஷா, தள்ளுவண்டி போன்றவைகளில் கொண்டுவரவும் அனுமதி கிடையாது. டிராக்டர், மினிலாரி, வேன் போன்ற நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே கொண்டு வரவேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.