search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுச்சேரியில் பந்த் எதிரொலி கடலூர் பஸ் நிலையத்தில் பயணிகள் தவிப்பு
    X

    கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல அரசு பஸ்களில் முண்டியடித்து ஏறிய பயணிகள்.

    புதுச்சேரியில் பந்த் எதிரொலி கடலூர் பஸ் நிலையத்தில் பயணிகள் தவிப்பு

    • கடலூர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தினமும் புதுச்சேரிக்கு சென்று வருவது வழக்கம்.
    • அதிகாலையில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் மற்றும் அரசு பஸ்கள் எதுவும் செல்லவில்லை.

    கடலூர்:

    கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்காகவும், மருத்துவமனைகளுக்கும், வேலைக்காகவும் ஆயிரக்கணக்கானோர் தினமும் புதுச்சேரிக்கு சென்று வருவது வழக்கம். புதுச்சேரி யூனியன் பிரதே சத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி அணியினர் இன்று புதுச்சேரி முழுவதும் பந்த் போராட்டம் அறிவித்தனர்.

    அதன்படி இன்று அதிகாலையில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் மற்றும் அரசு பஸ்கள் எதுவும் செல்லவில்லை. புதுச்சேரிக்கு செல்ல கடலூர் பஸ் நிலையத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அந்த சமயத்தில் ஒரே ஒரு தனியார் பஸ் மட்டுமே வந்து புதுச்சேரிக்கு கிளம்பியது. இதைத் தொடர்ந்து பல பஸ்கள் வரும் என்று எதிர் பார்த்திருந்த பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு மேல் கடலூர் டெப்போவில் இருந்து பயணிகளின் எண்ணிக்கைக் ஏற்ப பஸ்கள் வரவழைக்கப்பட்டு புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.

    இந்த பஸ்கள் புதுச்சேரி பஸ் நிலையத்திற்கு செல்லவில்லை. பயணிகள் அனைவரும் புதுச்சேரி இந்திராகாந்தி சிலை பஸ் நிறுத்தத்தில் இறக்கி விடப்பட்டனர். மேலும், கடலூரில் இருந்து இயக்க ப்படும் அரசு பஸ்களை தமிழக பகுதிகளில் போலீ சார் கண்காணித்து வருகி ன்றனர். இது தவிர ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம், குமாரமங்கலம் போன்ற பகுதிகளில் இருந்து கடலூருக்கு வரும் தனியார் நிறுவன தொழிலாளர்களும் பஸ்கள் இயக்கப்படாததால் பாதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×