search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனமழை காலங்களில் ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்:கடலூர் கலெக்டர் அறிவுரை
    X

    கனமழை காலங்களில் ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்:கடலூர் கலெக்டர் அறிவுரை

    • பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
    • மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது::- கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, பரவலாக மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் கனமழை காலங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொது மக்கள் அனைவரும், இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும்போது திறந்த வெளியில் நிற்பதை யும், நீர்நிலைகளில் குளிப்ப தையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்கக் கூடாது. வெள்ள பெருக்கு ஏற்படு வதற்கு முன்னர் கால்நடை களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கிய மான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். கடலூர் மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற் கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரகால கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி எண்களும் செயல்பட்டு வருகிறது. கட்டணமில்லா தொலைபேசி எண் - 1077மற்றும் 04142 - 220700 04142 - 23393 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். மேற்படி பெறப்படும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் அலுவலர்கள் மூலம் புகார்களை சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×