search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் ஆர்.எஸ்.பாரதி மீது பா.ஜனதாவினர் புகார்
    X

    பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலபதி என்ற குட்டி தலைமையில் புகார் அளிக்க வந்த பா.ஜனதாவினர்.

    பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் ஆர்.எஸ்.பாரதி மீது பா.ஜனதாவினர் புகார்

    • பாளை ஜோதிபுரத்தில் நடந்த கூட்டத்தில் தி.மு.க மாநில அமைப்பு செய லாளர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டு பேசினார்.
    • ஆர்.எஸ் பாரதி மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜனதா மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி தலைமையில் புகார் கொடுக்கப்பட்டது.

    நெல்லை:

    பாளை ஜோதிபுரத்தில் சமீபத்தில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி திணிப்புக்கு எதிரான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க மாநில அமைப்பு செய லாளர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் அவர் பேசிய போது, கவர்னரை பற்றியும், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பற்றியும் அவதூறாக பேசியதாக கூறி அவர் மீது நெல்லை மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பா.ஜனதா சார்பில் புகார் அளிக்க வேண்டும் என்று நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் தயா சங்கர் தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று ஆர்.எஸ் பாரதி மீது நடவடிக்கை எடுக்க கோரி பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி தலைமையில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் குரு கண்ணன், நிர்வாகிகள் முருகன், செந்தில் முருகன், செந்தில் முத்துக்குமார், வை கோபால், சண்முகசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×