என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புத்தகத் திருவிழா மூலம் மாணவர்களின் வாசிப்பு திறன் மேம்படும் - கலெக்டர் பேச்சு
- தஞ்சையில் வருகிற 14-ந் தேதி புத்தகத் திருவிழா தொடங்குகிறது.
- கண்காட்சியின் மூலம் மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த முடியும்.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்த மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழா வருகிற 14-ந் தேதி தொடங்கி தொடர்ந்து 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம், பொது நூலகம், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் 6-வது புத்தகத் திருவிழா 11 நாட்கள் நடைபெற உள்ளது.
மேலும், தஞ்சை புத்தகத் திருவிழா-2023 இலச்சினை வடிவமைப்பு போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தஞ்சை புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினையை வடிவமைத்து ஒரு எம்.பி. அளவில் ஜே.பி.ஜி. படமாக https://thanjavur.nic.in/thanjavurbookfestival என்ற இணையதளத்தில் தங்கள் பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் நாளை ( வெள்ளி கிழமை) மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த புத்தகக் கண்காட்சியின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே வாசிப்புத்திறனை மேம்ப டுத்த முடியும். இதேபோல, புத்தகம் வாசிக்கும் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகப்படுத்தும் நோக்கத்து டன் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். இதில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ். ஸ்ரீகாந்த் (வளர்ச்சி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.