search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண், பெண் குழந்தைகளை பாரபட்சமின்றி அறிவுரைகள் கூறி வளர்க்க வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
    X

    விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசியபோது எடுத்த படம்.

    ஆண், பெண் குழந்தைகளை பாரபட்சமின்றி அறிவுரைகள் கூறி வளர்க்க வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

    • மகளிர் தின விழாவிற்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.
    • நரிக்குறவர்களின் குழந்தைகள் பள்ளி செல்லும் நிலை தற்போது உருவாகியுள்ளது என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கீதா பள்ளியில் மாநகர தி.மு.க. மகளிர் அணி சார்பில் முதலாம் ஆண்டு மகளிர் தின விழா நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் பேச்சு போட்டி, கேள்வி- பதில், அறிவுத்திறன் போட்டி, மியூசிக்கல் சேர், பலூன் உடைத்தல், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு கள் வழங்கி பேசியதாவது:-

    கல்வி வேலைவாய்ப்பு களில் 30 சதவீதம் ஒதுக்கீடு, 8 மற்றும் பிளஸ்-2 வகுப்பு படித்தவர்களுக்கு திருமண உதவி, இப்போது பிளஸ்-2 வகுப்பிற்கு பின் கல்லூரி படிப்பை தொடர்வதற்கு புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது கட்டமாக தொடங்கி வைத்துள்ளார்.

    இதனால் 2 ஆண்டு காலம் கல்லூரி படிப்பை ஓதுக்கி வைத்தவர்கள் 13 ஆயிரம் பேர் கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளனர். கிராமப் புறங்களை சார்ந்தவர்களும் வளர்ச்சியடையும் வகையில் வங்கியில் வாங்கியுள்ள மகளிர் சுயஉதவி கடன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நரிக் குறவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதன் மூலம் அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.

    வாழ்க்கையில் தோல்வி வரத்தான் செய்யும். அதையும் கடந்து சாதனை படைக்க வேண்டும். ஜாதி, மதம், ஏழை- பணக்காரன் பாகுபாடு இல்லாமல் ஒன்றே குலம் ஓருவனே தேவன் என்ற கோட்பாடோடு பணியாற்றி நாம் பெற்ற ஆண், பெண் குழந்தைகளை பாரபட்சமின்றி நல்ல அறிவுரைகளை வழங்கி வளர்க்க வேண்டும். சத்தான உணவுகள் கொடுக்க வேண்டும் ஆடம்பரம் இல்லா மல் நாமும் அறிவுத்திறனை வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பா ளர் உமாதேவி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாநகர துணைச் செயலாளர் பிரமிளா, கவுன்சிலர்கள் ஜான்சி ராணி, கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் தனலட்சுமி, முத்துமாரி, ம.தி.மு.க. கவுன்சிலர் ராமுஅம்மாள், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் கவுன்சிலர் மும்தாஜ், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பார்வதி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணா தேவி, மகளிர் அணி நிர்வாகிகள் கவிதா தேவி, இந்திரா, பெல்லா, ரேவதி, சத்யா, கன்னிமரியாள், சந்தனமாரி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×