என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே கோவில் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரம் திருட்டு:பொதுமக்கள் பீதி
- இன்று காலை கோவில் குருக்கள் வேதமூர்த்தி கோவிலுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.
- உண்டியலில் இருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் திருடப்பட்டதாக தெரிகிறது.
கடலூர்:
கோவில் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே ஆனைக்குப்பம் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வழக்கம்போல் பூஜைகள் முடித்து இரும்பு கேட்டை பூட்டி சென்றனர்.இதனை தொடர்ந்து இன்று காலை கோவில் குருக்கள் வேதமூர்த்தி கோவிலுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் கோவிலில் இரும்பு கேட்டின் பூட்டு உடைந்து திறந்திருந்தது பின்னர் கோவிலுக்குள் சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்கள் கோவில் வளாகத்தில் இருந்த கேமராக்களை சேதம் செய்து சென்றதும் தெரியவந்தது.பின்னர் கைரேகை நிபுணர்களுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ைகரேகை நிபுணர்கள் அங்குள்ள தடயங்களை சேகரித்தனர்.
உண்டியலில் இருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் திருடப்பட்டதாக தெரிகிறது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோவில்கள் மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருந்து வருகிறார்கள்மேலும் ஆணைக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் பகுதிகளை சுற்றி போலீசார் வீடுகள் இருந்து வருவதால் எந்நேரமும் போலீசார் இவ்வழியாக சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதி களில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடை பெற்று வருவதால் பொது மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடு பட்டு திருட்டு சம்ப வத்தை உடனடியாக தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்