என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
அரசு ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வார விழா
- டாக்டர் பாபு மற்றும் ரம்யா தேவி கலந்துகொண்டு தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியத்தை எடுத்து கூறினர்.
- தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கத்தில் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் ரொட்டேரியன் பிவி. ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. மண்டல உதவி ஆளுநர் சிவக்குமார் முன்னிலையில் டாக்டர் பாபு மற்றும் ரம்யா தேவி கலந்துகொண்டு தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியத்தை எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி டெல்டா சங்க முன்னாள் தலைவர் சீனிவாசன் காளிதாஸ், செல்வகுமார் மற்றும் உறுப்பினர்கள் மாணிக்கவாசகம், மதன் அழகரசன் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. இறுதியில் செயலர் ரொட்டேரியன் ராஜதுரை நன்றி கூறினார்.
Next Story






