என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம் மண்டலத்தில் செங்கல் உற்பத்தி மும்முரம்
- ஒரு செங்கல் சூளை அமைக்க ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.
- செங்கல் தயாரிக்க பயன்படும் மண்ணை சுமார் 40 கி.மீட்டர் தூரம் வரை சென்று வாங்கி வருகின்றனர். 1 யூனிட் மண் சுமார் ரூ.2,500-க்கு வாங்கி வருவதாக அதன் உரிமை யாளர்கள் தெரிவித்த னர்.
அன்னதானப்பட்டி:
சிறிய கட்டிடங்கள், பெரிய கட்டிடங்கள், மாட மாளிகை, கோவில்கள் போன்ற எந்தவொரு கட்டிடமும் கட்டுவதற்கு அந்த காலம் முதல் இந்த காலம் வரை முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது செங்கல் தான். தற்போது 'ஹாலோ பிரிக்ஸ்' கற்கள் பயன்பாட்டுக்கு வந்து வர்த்தக ரீதியாக கடும் போட்டியை ஏற்படுத்தி இருந்தாலும் செங்கலின் பயன்பாடும், மவுசும் இன்னமும் குறையாமல் இருந்து வருவதை பார்க்க முடிகிறது.
ஒரு செங்கல் சூளை அமைக்க 1 ஏக்கர் பரப்பளவுக்கு இடம் தேவை. சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ஓமலூர், மேச்சேரி, மல்லூர், அத்தனூர், கிழக்குவலசு, குருசாமிபாளையம், வடுகம், சங்ககிரி, திருச்செங்கோடு, காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், பேளுக்கு றிச்சி, குமாரபாளையம், அரூர், தொப்பூர் உள்பட பல இடங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன.
இந்த தொழிலில் மறைமுக மாகவும், நேரிடையாகவும் ஏறக்குறைய 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மாதந்தோறும் சுமார் 1 கோடி அளவுக்கு செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் நல்ல தரமான மண் கொண்டு தயாரிக்கப்படுவதால் செங்கலின் தரமும் உயர்ந்து காணப்படுகிறது.
மேலும் இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் செங்கல் கோவை மாவட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்கலை விட தரமானதாக இருப்ப தாலும், விலை சற்று குறைந்து விற்கப்படுவதாலும் திருப்பூர், திருச்சி, அரியலூர், சென்னை, ஓசூர், பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து வந்து வாங்கி செல்கின்றனர்.
ஒரு செங்கல் சூளை அமைக்க ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. செங்கல் தயாரிக்க பயன்படும் மண்ணை சுமார் 40 கி.மீட்டர் தூரம் வரை சென்று வாங்கி வருகின்றனர். 1 யூனிட் மண் சுமார் ரூ.2,500-க்கு வாங்கி வருவதாக அதன் உரிமை யாளர்கள் தெரிவித்த னர். செங்கல் சூளை களில் வேலை செய்யும் தொழி லாளர்க ளுக்கு 6, 7 மாதங்கள் மட்டும் தான் வேலையும், வருமானமும் கிடைக்கிறது. அதேபோல் உரிமையாளர்களுக்கும் அதே நிலைதான். மழை இல்லாத காலங்களில் தான் செங்கல் உற்பத்தியும், விற்பனையும் நடக்கிறது.
இது குறித்து செங்கல் உற்பத்தி யாளர்கள் கூறுகையில், " தமிழகத்தி லேயே சேலத்தில் தான் செங்கல் உற்பத்தி அதிகளவில் நடைபெறு கிறது. ஏனெனில் இங்கு தரமான செங்கல்கள் உற்பத்தி செய்யப்ப ட்டு வருகி ன்றன. ஆயி ரக்க ணக்கான தொழி லாளர்கள் இத்தொ ழிலை நம்பி உள்ளனர். கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் செங்கல் உற்பத்தி 60 சதவீதம் வரை சரிந்தது. தற்போது நல்ல வெயில் அடித்து வருவதால், செங்கல் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளோம்.
வருகிற ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வரை செங்கல் உற்பத்தி நல்ல முறையில் நடைபெறும். தற்போது உற்பத்தி பணிகள் சூடு பிடித்துள்ளதால் கட்டுமானப் பணிகளுக்கு உடனுக்குடன் செங்கல்கள் அனுப்பி வைத்து வருகிறோம்.". இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்