என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே தம்பியை கொன்ற அண்ணன்:சொத்து தகராறில் பயங்கரம்
- சுரேஷ்குமார் (வயது 52). வார்டு உறுப்பினர், தி.மு.க. கிளைச் செயலாளர், இவரது தம்பி ரமேஷ் (50). பா.ஜ.க. பிரமுகர்.இவர்களுக்குள் சொத்து தகராறு அடிக்கடி ஏற்படும். .
- இவர்களுக்கு நடந்த தகராறில் நிலை தடுமாறிய ரமேஷ் அங்கேயே மயங்கி விழுந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் சென்னை சாலையில் வ.வு.சி. நகர் உள்ளது. இங்கு சுரேஷ்குமார் (வயது 52). வார்டு உறுப்பினர், தி.மு.க. கிளைச் செயலாளர். வெட்கிரைண்டர் சர்வீஸ் செய்யும் பணி செய்கிறார். இவரது தம்பி ரமேஷ் (50). பா.ஜ.க. பிரமுகர். இவர் கட்டில், பீரோ செய்து விற்பனை செய்கிறார். இவர்கள் 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது தந்தை மறைவிற்கு பின்னர், இவர்களுக்குள் சொத்து தகராறு அடிக்கடி ஏற்படும் இந்நிலையில், இன்று காலை சுரேஷ்குமார் மனைவிக்கும், ரமேஷின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் 2 பேரும் ஈடுபட்டனர். அப்போது 4 பேருக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ரமேஷை, சுரேஷ்குமார் பிடித்து தள்ளினார். இதில் வீட்டின் சுவற்றில் ரமேஷின் தலை மோதியது.
இதனால் நிலை தடுமாறிய ரமேஷ் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரமேஷ் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ரமேஷின் மனைவி அனு பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும், தள்ளுமுள்ளு நடந்த போது ரமேஷின் மகள் செல்போனில் வீடியோ எடுத்திருந்தார். இதனையும் போலீசாரிடம் காண்பித்து ரமேஷின் மனைவி அனு புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, சரண்யா தலைமையிலான போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.