search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சி தலைவர், உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல்- வாக்குகள் எண்ணிக்கை நாளை நடக்கிறது
    X

    ஊராட்சி தலைவர், உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல்- வாக்குகள் எண்ணிக்கை நாளை நடக்கிறது

    • வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்கு எண்ணும் பணிக்கு ஒருவர் மட்டுமே அனுமதி உள்ளது.
    • பேரூர் ெசட்டிப்பாளையத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டது.

    கோவை:

    கோவை கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் நெ.10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர். குருநல்லிபாளையம் 4-வது வார்டு, சொக்கனூர் ஊராட்சி 1-வது வார்டு நல் லட்டிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் ஆகிய இடங்கள் காலியானது.

    இதே போல பொள்ளாச்சி வடக்கு வடக்கிப்பாளையம் ஊராட்சி 2 வார்டு உறுப்பினர், தொண்டாமுத்தூர் பேரூர் செட்டிப்பாளையம் 1 -வது வார்டு உறுப்பினர் பதவிகள் காலியானது. காலியாக உள்ள பதவி இடங்களுக்கு தேர்தல் அறி விக்கப்பட்டது. ஏற்கனவே நல்லட்டிபாளையம், சொக்க னூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினருக் கான தேர்தலில் வார்டு உறுப்பினர்கள் 2 பேர் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதனால் நெ.10 முத்தூர் ஊராட்சி தலைவர் மற்றும் குருநல்லிபாளையம், வடக்கிப்பாளையம், பேரூர் செட்டிப்பாளையம் வார்டு உறுப்பினர் ஆகிய பதவிக ளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. வாக்குப் பெட்டிகள் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    பின்னர் நெ.10 முத்தூர், குருநெல்லிப்பாளையம் பதிவான வாக்கு பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

    அங்கு போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டு உள்ளது. வடக்கிப்பாளையத்தில் பதிவான வாக்குகள் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், பேரூர் ெசட்டிப்பாளையத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டது.

    வாக்கு எண்ணும் மையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணுவதற்கு மேஜைகள் போடப்பட்டு உள்ளது. ஒரு மேஜைக்கு 3 பேர் என 2 மேஜைகளுக்கு 6 பேர் பணிபுரிவார்கள். ஊராட்சி தலைவர் பதவிக்கு வாக்கு எண்ணும் பணியில் வேட்பாளர் மற்றும் அவருடன் ஒரு நபர் என 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    அதேபோல வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்கு எண்ணும் பணிக்கு ஒருவர் மட்டுமே அனுமதி உள்ளது. வாக்கு எண்ணும் பணியை பார்வையிட வரும் போது, செல்போன், பேனா, நோட்டு கொண்டு வர அனுமதி இல்லை.

    Next Story
    ×