என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா தேர் பவனி
- வள்ளியூர் அருகே உள்ள தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா கடந்த 8-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- நள்ளிரவு 12 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்ப்பவனி தொடங்கியது.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே உள்ள தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா கடந்த 8-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் புனித கொடியேற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அருட்தந்தை ஒய்.தேவ ராஜன் அடிகளார் தலை மையில் மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது.
குருவானவர் பீட்டர் பாஸ்டியான், ஓ.எல்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அசன உணவு வழங்கப்பட்டது.
திருவிழா தொ டர்ந்து 10 நாட்கள் கொண் டாடப்பட்டது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும் இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெற்றது. 8-ம் திருவிழா அதிகாலை கோலப்போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் பின்னர் விளை யாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது.
16-ந் தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்பட்டது. அன்று மாலை அருட்தந்தை ஒய்.தேவராஜன் அடிகளார் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. கிழவனேரி பங்கு தந்தை ப்ராக்ரஸ் மறையுரை வழங்கினார். சிறப்பு ஆராதனையில் பணகுடி பங்குதந்தை வளன், தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய பங்கு தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்கு தந்தை சிபுஜோசப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்ப்பவனி தொடங்கியது. முன்னதாக தேர்களை பங்கு தந்தை ஜெரால்டு எஸ்.ரவி ஜெபம் செய்து அர்ச்சித்தார். தேர்ப்பவனி கோவிலைச் சுற்றியுள்ள ரதவீதிகளில் வலம் வந்து அதிகாலை 5 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. தேர்ப்பவனியின் போது பக்தர்கள் உப்பு, மிளகு, பூமாலை காணிக்கை செலுத்தி வழிபட்டனர். நேற்று 10-ம் திருவிழா கொண்டாடப்பட்டது. அதிகாலை 5.30 மணிக்கு அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் அடிகளார் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் பகல் 11 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்ப்பவனி நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்கு தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்கு தந்தை சிபுஜோசப் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு மக்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்