search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தச்சநல்லூர் சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

    • இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூரில் சிவன்கோவில் என அழைக்கப்படும் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

    தேரோட்டம்

    இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. மறுநாள் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    விழா நாட்களில் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 8.30 மணிக்கு வருசாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 10 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினார்கள்.

    தொடர்ந்து தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்ட நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, பகுதி செயலாளர் சின்னத்துரை, முன்னாள் மண்டல சேர்மன் மாதவன், நிர்வாகிகள் பள்ளமடை பாலமுருகன், போர்வெல் மணி, பாக்யராஜ், வேல்முருகன், தாழை மீரான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தேர் 4 ரத வீதிகளையும் சுற்றி கோவிலை வந்து அடைந்தது.

    Next Story
    ×