என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![நீலகிரி சேவா கேந்திரம் சார்பில் 45 இடங்களில் தூய்மை பணி நீலகிரி சேவா கேந்திரம் சார்பில் 45 இடங்களில் தூய்மை பணி](https://media.maalaimalar.com/h-upload/2023/10/05/1961083-untitled-1.webp)
X
நீலகிரி சேவா கேந்திரம் சார்பில் 45 இடங்களில் தூய்மை பணி
By
மாலை மலர்5 Oct 2023 1:52 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பந்தலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.
- மாவட்டம் முழுவதும் மருத்துவமனைகள், கிராமப்புற சாலைகள் துாய்மைபடுத்தப்பட்டன.
ஊட்டி,
காந்திஜெயந்தியை முன்னிட்டு நீலகிரி சேவா கேந்திரம் சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. மாவட்டம் முழுவதும் 45 இடங்களில் இந்த பணி நடந்தது.
பந்தலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். கூடலூர் எம்.எல்.ஏ., ஜெயசீலன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் கோவில் வளாகங்கள், குளங்கள், மருத்துவமனைகள், கிராமப்புற சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள், பள்ளி வளாகங்கள் துாய்மைபடுத்தப்பட்டன.
அந்தந்த பகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இந்த மக்கள் பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோட்ட பொறுப்பாளர் மனோஜ் குமார், மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story
×
X