என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கங்கள் தர்ணா
- ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும்.
- கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு பதிவாளர் அலுவலகத்தின் தலையீடுகள் அதிகமாகி உள்ளது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையின் மீது உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கருணை ஓய்வூதியம் 10 ஆயிரம் வழங்கிட வேண்டும். ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து சம்பளம் பெறும் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும், கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு பதிவாளர் அலுவலகத்தின் தலையீடுகள் அதிகமாகி உள்ளது. அவர்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக தொந்தரவுகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன . இது குறித்து பதிவாளர் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதற்கு தஞ்சை மாவட்ட வங்கி சங்க ஊழியர் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். தர்ணா போராட்டத்தினை ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் தொடக்கி வைத்தார். போராட்டத்தில் கோரிக்கைகள் குறித்து தீர்வு காணாவிட்டால் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநிலந்தழழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டது.
இதில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன செயலர் கோவிந்தன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர்சுரேஷ், பொருளாளர் ராமச்சந்திரன், தஞ்சாவூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற ஊழியர் சங்க தலைவர் சிவமணி, சங்க செயலாளர் கந்தவேல், ஓய்வு பெற்ற நகர வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பாண்டியன், மாவட்ட கூட்டுறவு நகர வங்கி ஊழியர் சங்க பொருளாள ர்நெப்போலியன், மாவட்ட தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் மனோகரன், மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க தலைவர் வீரசேகர் , மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் பொதுச்செயலாளர் குமார் , ஓய்வு பெற்ற அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மாநில துணை தலைவர் துரை. மதிவாணன், தஞ்சை நாகை திருவாரூர் மாவட்டம் மாவட்ட கூட்டுறவு நகர வங்கி ஊழியர் சங்க செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏ.ஐ.டி.யூ.சி.மாவட்ட செயலாளர் தில்லைவனம் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்