search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் 3 கூட்டத்தில் பங்கேற்க தடை
    X

    கோவை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் 3 கூட்டத்தில் பங்கேற்க தடை

    • மாநகராட்சி அலுவலக பராமரிப்பு பணிக்கு ரூ.48.80 லட்சம் நிதி ஒதுக்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு
    • கூட்டஅரங்கு முன்பு நின்று கோரிக்கை அடங்கிய பதாகை ஏந்தியபடி போராட்டம்

    கோவை,

    கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா நேற்று தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 47-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் பேசும்போது மாநகராட்சி அலுவலக பராமரிப்பு பணிக்கு ஆண்டுக்கு ரூ.48.80 லட்சம் நிதி ஒதுக்குவதாக தீர்மானம் நிறைவே ற்றப்பட்டு உள்ளது. இது அதிகம் எனவே இந்த தீர்மானத்தை நிறுத்து வைக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்து மேயர் கல்பனா பேசியதாவது:-

    கடந்த ஆட்சி காலத்தில் நீங்கள் எவ்வளவு தொகை ஒதுக்கினீர்களோ அதே தொகை தான் இப்போதும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் விமர்சனம் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்றார்.

    ஆனால் அதி.மு.க. கவுன்சிலர் பிரகாகரன் மேயர் பதிலை ஏற்காமல் தொடர்ந்து விமர்சனம் செய்யும் நோக்கில் பேசிக் கொண்டு இருந்தார்.

    இதனையடுத்து மேயர் கல்பனா அவையை நடத்த விடாமல் இடையூறு செய்தாக கூறி அடுத்து நடைபெற உள்ள 3 மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரனுக்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.

    முன்னதாக அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன், கூட்ட அரங்கு முன்பு நின்று கோரிக்கை அடங்கிய பதாகையை ஏந்தி நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.

    மாநகராட்சி உள் விளையாட்டு அரங்கில் பயிற்சி செய்து வரும் வீரர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் இலவசமாக பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×