என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை போலீஸ் கமிஷனர் 76 கி.மீ சைக்கிள் பயணம்
- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
- இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கோவை.
வருகிற 15-ந் தேதி 76-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.76-வது சுதந்திர தின விழாவை குறிக்கும் வகையில் கோவை மாநகர போலீஸ் சார்பில் பொது மக்களுடன் இணைந்து 76 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் இன்று நடந்தது.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பயணம் புறப்பட்டது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்ததுடன், தானும் சைக்கிளில் பயணம் செய்தார். இந்த பயணமானது செல்வபுரம், பேரூர், மாதம்பட்டி, ஆலந்துறை, காருண்யா நகர், ஈஷா வழியாக 76 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்கிறது.
இதில் போலீஸ் கமி ஷனர் பாலகிரு ஷ்ணன், துணை போலீஸ் கமிஷனர்கள் சந்தீஷ், மதிவாணன், சுகாசினி மற்றும் காவல்துறை அதிகாரிகளும், போலீ சாரும், பொதுமக்களும் இதில் பங்கேற்றனர். 4 மணி நேரம் இந்த சைக்கிள் பயணம் நடந்தது.
இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.






