என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் கலெக்டர் ஆகாஷ் தேசியகொடி ஏற்றினார்
    X

    கலெக்டர் ஆகாஷ் தேசிய கொடியேற்றி புறாக்களை பறக்கவிட்ட காட்சி.

    தென்காசியில் கலெக்டர் ஆகாஷ் தேசியகொடி ஏற்றினார்

    • கலெக்டர் ஆகாஷ் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பதக்கங்களை வழங்கினார்.
    • ரூ.2.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர், பயனாளிகளுக்கு வழங்கினார்.

    தென்காசி:

    நாட்டின் 74- வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தேசிய கொடியை ஏற்றினார்.

    அதனைத் தொடர்ந்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு , காவலர்களுக்கான முதல்-அமைச்சர் பதக்கங்களை வழங்கினார்.

    தொடர்ந்து, மாவட்டத்தின் சிறப்பாக செயல்பட்ட 29 துறையை சேர்ந்தவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 10 பேர் உள்பட 257 பேருக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

    மேலும், 21 பயனாளிகளுக்கு ரூ.2.14 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட கலெக்டர், என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, பள்ளி மாணவ- மாணவிகள் நிகழ்த்தி வரும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு பாராட்டினார்.

    இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தியாகி சொக்கலிங்கம் பிள்ளை அவர்களின் மனைவி, முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி லட்சுமிகாந்தன்பாரதி உள்பட பல்வேறு துறையை சேர்ந்த உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×