search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய கலெக்டர் அழைப்பு
    X

    கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய கலெக்டர் அழைப்பு

    • விவசாயிகள் கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய சேலம் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளர்.
    • காப்பீடு திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு 5 பசு, எருமைகளுக்குக் காப்பீடு செய்து கொள்ளலாம்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கால்நடை காப்பீடு செய்ய 3,600 குறியீடு நிா்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ளலாம். வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவா்களுக்கு ரூ. 50 மானியத்திலும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள், தாழ்த்தப்பட்டவா் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.70 மானியத்திலும் காப்பீடு செய்யப்படும்.

    இத் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு 5 பசு, எருமைகளுக்குக் காப்பீடு செய்து கொள்ளலாம். இத் திட்டத்தில் இரண்டரை வயது முதல் 8 வயது உடைய பசு மற்றும் எருமைகளுக்கும் மற்றும் 1 முதல் 3 வயதுடைய வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

    ஓராண்டு காப்பீடு கட்டணமாக அதிகபட்சமாக கால்நடையின் மதிப்பில் 2 சதவீதமும், மூன்றாண்டு காப்பீடு கட்டணமாக அதிகபட்சமாக கால்நடையின் மதிப்பில் 5 சதவீதமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ரூ. 35, 000-க்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான மதிப்பிற்கான காப்பீடு கட்டணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய விரும்பும் கால்நடை வளா்ப்போா் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி பயன்பெறலாம் என சேலம் கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×