search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே மோதல் : பா.ஜனதா நிர்வாகி மீது தாக்குதல்; பஞ்சாயத்து தலைவி உள்பட 3 பேர் மீது வழக்கு
    X

    நாங்குநேரி அருகே மோதல் : பா.ஜனதா நிர்வாகி மீது தாக்குதல்; பஞ்சாயத்து தலைவி உள்பட 3 பேர் மீது வழக்கு

    • சந்திரலேகாவிற்கும், முத்துசெல்விக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
    • இந்நிலையில் நேற்று பூலம் தொடக்கப்பள்ளியில் நடந்த பெற்றோர்-ஆசிரியர் ஆலோசனை கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பூலம், மேலத்தெருவை சேர்ந்தவர் ஊய்க்காட்டான் மனைவி சந்திரலேகா (வயது37). இவர் நாங்குநேரி மேற்கு ஒன்றிய பா.ஜனதா துணை தலைவியாகவும், திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மருந்தாளுனராகவும் உள்ளார். அதே ஊரை சேர்ந்தவர் முத்துராஜ் மனைவி முத்து செல்வி (50). இவர் பூலம் பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்.

    தாக்குதல்

    சந்திரலேகாவிற்கும், முத்துசெல்விக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பூலம் தொடக்கப் பள்ளியில் நடந்த பெற்றோர்-ஆசிரியர் ஆலோசனை கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து முத்து செல்வியும், அவரது கணவர் முத்துராஜும் (55) சேர்ந்து, சந்திரலேகாவை தாக்கிய தாகவும், இதுபோல சந்திர லேகா, முத்துராஜை தாக்கிய தாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து இருவரும் தனித்தனியாக மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தனர். நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜு, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் இது தொடர்பாக சந்திரலேகா, முத்துசெல்வி, அவரது கணவர் முத்துராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே சந்திர லேகாவை தாக்கிய பஞ்சாயத்து தலைவி முத்து செல்வி மற்றும் அவரது கணவர் முத்துராஜை கைது செய்ய கோரி, நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் பா.ஜ.க.வினர் மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×