என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நிலத்தகராறில் மோதல்; 9 பேர் மீது வழக்கு
- ஆறுமுகம் (55), அரவிந்த் (28) மற்றும் ஆறுமுகம் மனைவி பத்தாமணி (50) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- பொது வழித்தட பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில், இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏரியூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மூங்கில்மடுவு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் இவரது மகன் சதீஷ்குமார் (வயது28) விவசாயி. இவரது குடும்பத்திற்கும் பக்கத்து நிலத்தை சேர்ந்தவரான ஆறுமுகம் என்பவரது குடும்பத்திற்கும் கடந்த 15 ஆண்டுகளாக பொது வழித்தட பிரச்சனை இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று மாலை சதீஷ்குமார் தனது நிலத்தில் இருந்த பொழுது, பக்கத்து நிலத்தை சேர்ந்த ஆறுமுகம் ஆபாச வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டல் விடுத்தும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த சதீஷ்குமாரின் சகோதரர் அய்யந்துரை தட்டி கேட்டதாகவும் இதனால் ஆறுமுகம் தனது மகன் அரவிந்துடன் சேர்ந்து அய்யந்துரையையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் இதனை தடுக்க சென்ற சதீஷ்குமாரின் தாயார் மற்றும் அண்ணியையும் ஆறுமுகத்தின் மனைவி தாக்கியதாகவும், ஆறுமுகம் மற்றும் அரவிந்த் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த சதீஷ்குமார் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆறுமுகம் (55), அரவிந்த் (28) மற்றும் ஆறுமுகம் மனைவி பத்தாமணி (50) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோன்று ஆறுமுகம் மனைவி பத்தாமணி தன்னையும் தனது கணவரையும், அய்யந்துரை, சதீஷ்குமார், அருள், பெருமா, சுசீலா, சரிதா ஆகிய ஆறு பேரும் சேர்ந்து தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் இவர்கள் ஆறு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பொது வழித்தட பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில், இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.