என் மலர்
உள்ளூர் செய்திகள்
நெல்லையில் இன்று, சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் குறித்து காங்கிரஸ் கருத்தரங்கம்- தனுஷ்கோடி ஆதித்தன் பங்கேற்பு
- சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம், குறித்த கருத்தரங்கம் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் மாநில ஓ.பி.சி. பிரிவு தலைவர் நவீன் கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார்.
நெல்லை:
காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட ஓ.பி.சி. பிரிவு சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும், முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் இன்று நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர் மாவட்ட ஓ.பி.சி. பிரிவு தலைவர் டியூக் துரைராஜ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட ஓ.பி.சி தலைவர் ஜான் கென்னடி, மாநகர் மாவட்ட ஓ.பி.சி. துணை தலைவர் ரிச்சர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஓ.பி.சி. பிரிவு தலைவர் நவீன் கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் ஓ.பி.சி. பிரிவு பொதுச்செயலாளர்கள் மோகன், குச்சூரி, நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், ஓ.பி.சி. பிரிவு மாநில துணை தலைவர் நித்யபிரியா ரவி, மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் தனசிங் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.