search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொத்தங்குடியில், முருங்கை தோட்டம் அமைக்கும் பணி
    X

    முருங்கை தோட்டம் அமைக்கும் பணி நடந்தது.

    கொத்தங்குடியில், முருங்கை தோட்டம் அமைக்கும் பணி

    • முருங்கை சாகுபடி மூலம் கிடைக்கக்கூடிய வருமானம் குறித்து பேசினார்.
    • துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கொத்தங்குடியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஐசிஐசிஐ பவுண்டேஷன் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதித்திட்டத்தின்கீழ் முருங்கை தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்றது.

    இதில், ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உயர்ரக விளைச்சல் திறன் கொண்ட ஆண்டுதோறும் காய்ப்புத்திறன் கொண்ட 200 முருங்கை கன்றுகள் நடப்பட்டன.

    இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சிமன்ற தலைவர் அமராவதிராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராஜ்குமார், மாவட்ட வள பயிற்றுநர் நிறுவன மேம்பாட்டு பாலமுருகன், முன்னோடி விவசாயி பாலசுப்ரமணியன், குத்தாலம் ஒன்றிய மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில், ஐசிஐசிஐ பவுண்டேஷன் வளர்ச்சி அலுவலர் உஷா திட்ட விளக்கவுரையாற்றி முருங்கை தோட்டம் அமைப்பதன் குறிக்கோள்கள் குறித்தும், முருங்கை சாகுபடியின் மூலம் கிடைக்க க்கூடிய வருமானம் குறித்தும், இத்தோட்டத்தினை மகளிர் குழுவினர் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதனை குறித்து விளக்கி பேசினார்.

    இதில், ஒருங்கி ணைந்த மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கிருத்திகா, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் மனுநீதிசோழன், கிராம நிர்வாக அலுவலர் சாமிநாதன் மற்றும் ஐசிஐசிஐ பவுண்டே ஷன் சிவான ந்தம் உள்ளிட்ட நிறுவன களப்பணியாளர்கள், கொத்தங்குடி ஊராட்சி தூய்மை பணியாளர்கள், பணிதல பொறுப்பாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×