என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
ஆற்றுப்பாலம் கட்டும் பணி : சிவகிரி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம்

- சிவகிரி தாலுகா அலுவலக கூட்டரங்கில் தாசில்தார் பழனிவேல்சாமி தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
- மங்கம்மாள் சாலையில் கணபதி ஆற்றுப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
சிவகிரி:
சிவகிரி தாலுகா அலுவலக கூட்டரங்கில் சிவகிரி அருகே ராயகிரி மங்கம்மாள் சாலையில் கணபதி ஆற்றுப்பாலம் கட்டும் பணி தொடர்பாக தாசில்தார் பழனிவேல்சாமி தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
ராயகிரி பாகம் -1 கிராமத்தில் மங்கம்மாள் சாலையில் கணபதி ஆற்றுப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மாற்று சாலை போக்குவரத்து வசதிகள் செய்து தராமல் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் விஸ்வநாதபேரி, வடக்கு சத்திரம், தெற்கு சத்திரம் வழியாக ராயகிரி செல்லும் சாலையில் சுமார் இரண்டு மாத காலமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ராயகிரி, ராமநாதபுரம், அருளாட்சி மற்றும் ராயகிரி வழியாக துரைச்சாமியாபுரம், சங்கரன்கோவில் செல்லும் பஸ்கள் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உள்ளார் சாலை வழியாக சென்று வந்தன. இதனால் சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஆகவே இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிவகிரியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டம் பொறி யாளர் அலுவலகத்திற்கு பூட்டு போடுவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலமாக ராயகிரி மங்கம்மாள் சாலையில் கணபதி ஆற்றுப்பாலம் கட்டும் பணிக்கு மாற்றுப்பாதை 10 நாட்களுக்குள் அமைத்துத் தருவதாக உறுதிமொழி கடிதம் தரப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த சிவகிரி நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டம் பொறியாளர் அலுவலகத்திற்கு பூட்டுப் போடும் திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாலம் கட்டவும், போக்கு வரத்திற்கு எவ்விதமான இடையூறும் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளவும் நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்துமாறு தெரிவி க்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நிரந்தரமாக இப்போராட்டம் வாபஸ் பெறப்படும் என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் இன்ஸ்பெ க்டர் மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) கணேஷ், மண்டல துணை தாசில்தார் சிவபிரகாசம், வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சமுத்திரகனி, வேலு, ராஜேந்திரன், மணிகண்டன், சின்ன வேல்சாமி, சொரிமுத்து, அய்யாசாமி, பேரூராட்சி கவுன்சிலர் இருளப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.