என் மலர்
உள்ளூர் செய்திகள்

கட்டிட தொழிலாளி மண்டை உடைப்பு-தொழிலாளி கைது
- கடந்த 3 நாட்களுக்கு முன்பு 3000 ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.
- இந்த பணத்தை கார்த்திக், சரவணனிடம் திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
சேலம்:
சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த வர் சுதாகர் (வயது30). கட்டிட தொழிலாளி. இவரது அண்ணன் கார்த்திக்.
இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சரவணன் (40) என்பவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு 3000 ரூபாய் கடன் கொடுத்துள்ளார். இந்த பணத்தை கார்த்திக், சரவணனிடம் திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சரவணன், நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திக் வீட்டிற்கு வந்தார். அங்கு நின்ற சுதாகரிடம் உன்னுடைய அண்ணன் எங்கே என்று கேட்டுள்ளனர். அவர் வெளியில் சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். உங்கள் அண்ணன் கொடுத்த பணத்தை தரமுடியாது என கூறி சுதாகரை கட்டையால் தாக்கினர். இதில் சுதாகரின் மண்டை உடைந்தது. வலிதாங்க முடியமல் சத்தம் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்த சுதாகரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனார்.
இதுகுறித்து கொண்ட லாம்பட்டி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சுதாகரை தாக்கிய கும்பலை தேடி வந்தனர். இதில் தலைமறைவாக இருந்த சரவணன் போலீ சாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வரு கின்றனர்.






