search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை
    X

    கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை

    • கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த வண்ணம் உள்ளது.
    • மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

    கடலூர், அக்.20-

    மத்திய கிழக்கு வங்கக்க டல் மற்றும் வடக்கு அந்த மான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த சுழற்சி பகுதியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. மேலும் வருகிற 22- ந் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும், மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று புயலாக மாறி உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த வண்ணம் உள்ளது. இந்த மழை இரவு நேரங்களில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வானமாதேவி, வடக்குத்து, லால்பேட்டை, எஸ் ஆர். சி, குடிதாங்கி, கீழ் செருவாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவ லாக மழை பெய்தது. நேற்று இரவு கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் மழை பெய்து வந்தது. இன்று காலை முதலே லேசான மழை பெய்து வருகிறது.

    தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் 3 நாட்களில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை எதிர்பார்த்திருக்கும் சாலையோர பட்டாசு வியாபாரிகள், பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான சிறு சிறு கடை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் வருகிற 26-ந் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி யதை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இது மட்டும் இன்றி விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிக்காத வகை யில் விவசாயிகளும் வேளாண்மை துறை அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×