search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசியில் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை
    X

    நெல்லை, தென்காசியில் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை

    • தென்காசி தலைமை ஆஸ்பத்திரியில் 100 படுக்கை வசதிகள் ஏற்படு த்தப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது.
    • கடந்த ஆண்டுகளில் சுமார் 3 ஆயிரம் படுக்கைகள் வரை ஏற்படுத்தப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    நெல்லை:

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பரவலை தடுப்பதற்காக நாடெங்கும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தயார் நிலையை சோதித்து அறிவதற்கான ஒத்திகை இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், சுரண்டை, ஆய்க்குடி, இலஞ்சி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முன்எச்சரிக்கை நடவடி க்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசியில் உள்ள மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் 100 படுக்கை வசதிகள் ஏற்படு த்தப்பட்டு இன்று ஒத்திகை பார்க்க ப்பட்டது. கொரோனா பாதிப்பு அடைந்த வர்களுக்கு ஆக்சிஜன் வசதிகள் இருப்பதை உறுதி செய்யும் ஒத்திகையும் நடந்தது.

    கடந்த முறை கொரோனா பாதிப்பு ஏற்ப டக்கூடிய நபர்களுக்கு சிகிச்சை அளிப்பத ற்காக கடையநல்லூர், புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் தலா 25 படுக்கைகளும், சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் 40 படுக்கை களும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதேபோல் இந்த முறையும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கைகள் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டீன் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் கொரோனா தடுப்பு ஒத்திகை பணிகள் இன்று தொடங்கியது. நெல்லை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டுகளில் கொரோனா பாதிப்பின்போது சுமார் 3 ஆயிரம் படுக்கைகள் வரை ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதில் கொரோனா சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுத்து சுமார் 1,100 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகளுடன் நிரந்தர மாக கொரோனா வார்டாக வைக்கப்பட்டு உள்ளது. அந்த வார்டில் இன்று ஒத்திகை நடத்தப்பட்டது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த முறை அரசு ஆஸ்பத்திரியில் 1,500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவை அனைத்தும் தற்போதும் அதே நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதுதவிர திருச்செந்தூர், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிகளிலும் ஒத்திகை நடைபெற்றது.

    Next Story
    ×