search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு  சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை நீடிப்பு
    X

    மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.

    குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை நீடிப்பு

    • குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்தது.
    • சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்தது.

    இந்நிலையில் நேற்று மதியம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் ஐந்தருவி,மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இன்று காலையில் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.இருப்பினும் மெயினருவியில் தொடர்ந்து தண்ணீர் அதிகளவில் விழுந்ததால் அங்கு மட்டும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

    Next Story
    ×