என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் மின்மாற்றி பழுதானதால் நீரின்றி கருகும் பயிர்கள்:விவசாயிகள் கவலை
- மின்மாற்றி பழுதடைந்தால் அதனை மாற்றி தருமாறு விவசாயிகள் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
- அதிகாரிகள் இதுவரை டிரான்ஸ்பார்மர் வெடித்த தாக தங்களுக்கு தகவல் இல்லை என்று கூறு கிறார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பணப்பாக்கம் கிராமத்தில் உள்ள மின்மாற்றி மூலமாக 50-க்கும் மேற்பட்ட விவ சாயிகள் மின்மோட்டார் களுக்கு மின்சாரம் செல்கிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மின்மாற்றி பழுத டைந்தது. இதையடுத்து மின்மாற்றி பழுதடைந்தால் அதனை மாற்றி தருமாறு விவசாயிகள் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். 2மாத காலமாகி யும் மின்மாற்றி சீரமைக்கப் படாததால் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருக்கும் கரும்பு, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதாக விவசாயி கள் வேதனை தெரி விக்கின்றனர். பழுத டைந்த மின்மாற்றியை சீர மைத்து, கருகி வரும் பயிர்களை காப்பாற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பது பணப்பாக்கம் கிராம விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து விவசாயி சேஷாயிலு கூறியதாவது:-. ஒன்றரை ஏக்கர் நிலம் வைத்திருக்கிறேன்.தனது நிலத்தின் மின்மோட்டா ருக்கு மின்சாரம் வழங்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆகியும் புதிய டிரான்ஸ் பார்மர் வைக்கப்படாததால் பயிர்கள் காய்ந்து கருகி உள்ளது இதே மின் டிரான்ஸ்பார்மரில் இருந்து 2 செங்கல் சூளைக்கு மின்சாரம் சென்று கொண்டிருந்தது. தற்போது அவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படாமல் வேறு டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டு விவசாயிகளை நிற்கதியில் விட்டு விட்டனர். பண்ருட்டி மின்துறை அதிகாரிகளோ சீனியாரிட்டி அடிப்படை யில் தான் டிரான்ஸ்பார்மர் வரும் என்று சொன்னார்கள். சென்னை மின்னக தொலைபேசியில் புகார் செய்த போது கடலூரில் இருந்து தொடர்புக்கு வந்த அதிகாரிகள் இதுவரை டிரான்ஸ்பார்மர் வெடித்த தாக தங்களுக்கு தகவல் இல்லை என்று கூறு கிறார்கள். இவ்வாறு அவர் தெரி வித்தார்.