search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் பாராட்டு
    X

    போட்டிகளில் வென்ற மாணவர்களை தருமபுர ஆதீனம் வாழ்த்தினார்.

    விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் பாராட்டு

    • பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
    • பள்ளியின் புரவலரும் தருமையாதீனம் 27-வது குருமகாசந்நிதானம் பாராட்டி அருளாசி வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் குறுவட்ட அளவில் நடைப்பெற்ற விளை யாட்டுப் போட்டிகளில் தருமை ஆதீனம் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 307 மாணவ-மாணவிகள் கலந்துக் கொண்டு 217 மாணவ-மாணவிகள் அதிகப் போட்டிகளில் வெற்றிப்பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று பள்ளிக்குப் பெருமைச் சேர்த்துள்ளனர்.

    வெற்றிப்பெற்ற மாணவர்களையும் சாரண-சாரணியர் அமைப்பின் நீண்டக் கால சேவைக்கான மாநில விருதினை பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் இருந்து பெற்று வந்துள்ள பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரும் சாரண-சாரணிய ஆசிரியர் சுந்தர் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும், நிர்வாகக் குழுத் தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், நிர்வாகச் செயலர் பாஸ்கரன் மற்றும் பள்ளி முதல்வர் சரவணன் ஆகியோரை பள்ளியின் புரவலரும் தருமையாதீனம் 27-வது குருமகாசந்நிதானம் பாராட்டி அருளாசி வழங்கினார்.

    Next Story
    ×