என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அன்னூரில் சேதம் அடைந்த குடிநீர் தேக்க தொட்டி இடித்து அகற்றம்
- 15 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது.
- தொட்டியின் 4 தூண்களும் இடிந்து கீழே விழும் நிலையில் காணப்பட்டது.
அன்னூர்
கோவை மாவட்டம் அன்னூர் வட்டத்திற்குட்பட்ட காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டம்பட்டியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும்.
இந்த நிலையில் தொட்டியின் 4 தூண்களும் இடிந்து கீழே விழும் நிலையில் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கிராம சபை கூட்டங்கள் மற்றும் கவுன்சிலர், ஊராட்சிபஞ்சாயத்து தலைவரிடமும் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான செய்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நமது மாலைமலர் நாளிதழில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று இடிந்து விழம் நிலையில் இருந்து நீர் தோக்க தொட்டி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
மேலும் புதிதாக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தேக்க தொட்டி கட்டப்படும் என பஞ்சாயத்து தலைவர் தெரிவித்தார். குடிநீர் தொட்டியை இடித்து அகற்றப்பட்டதற்காக, இது தொடர்பான செய்தி வெளியிட்ட மாலைமலர் நாளிதழுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.