என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் தமிழக ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் காங்கிரசாரை படத்தில் காணலாம்.

    பாளையில் தமிழக ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

    • தமிழகம் முழுவதும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பாளை ஜோதிபுரத்தில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதாகவும், சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றிய போது காமராஜர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் பெயரை கூற மறுத்ததற்கு கண்டனம் தெரிவித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பாளை ஜோதிபுரத்தில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

    கண்டன கோஷம்

    மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதாகவும், சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றிய போது காமராஜர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் பெயரை கூற மறுத்ததற்கு கண்டனம் தெரிவித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் கவுன்சிலர்கள் அனுராதா சங்கர பாண்டியன், அம்பிகா, மண்டல தலைவர்கள் கோட்டூர் முருகன், ரசூல் மைதீன், ராஜேந்திரன், அய்யப்பன், கெங்கராஜ், பொதுக்குழு உறுப்பி னர்கள் கவி பாண்டியன், சொக்கலிங்க குமார், பொதுச் செயலாளர் மகேந்திர பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பாளை-திருவனந்தபுரம் சாலையில் உள்ள மதுக் கடையை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    பின்னர் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கூறியதாவது:-

    தமிழக ஆளுனரின் செயல் சட்டமன்றத்தை அவமதிப்பதாக உள்ளது, எனவே அவரை உடனடி யாக தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். அவரின் அவமதிப்பு நடவடிக்கை காரணமாகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுனருக்கு எதிராக கண்டன தீர்மானத்தை நிறைவேற்றினார். ஆளுநரை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×