என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எட்டயபுரம் பேரூராட்சி பகுதிகளில் ரூ. 3 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகியவற்றை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- 15-வது நிதி குழு மானியத் திட்டத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அந்த பணிகளை தொடங்கி வைத்தார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் பேரூராட்சி யில் ரூ. 3 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் தார்ச்சாலை அமைத்தல், பேவர்பிளாக் சாலை அமைத்தல் மற்றும் பேரூராட்சி பொதுநிதியில் கட்டப்பட்ட மன்ற கூட்ட அரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடந்தது.
எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிர மணியன் முன்னிலை வகித்தார்.
இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், ரூ. 7 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை, பேரூராட்சி பொதுநிதி திட்டத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மன்ற கூட்ட அரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
தொடர்ந்து கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் கீழ் 11-வது வார்டு பகுதியில் ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், 3-வது வார்டு பகுதியில் ரூ. 79 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைத்தல், 15-வது நிதி குழு மானியத் திட்டத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அந்த பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன், பேரூராட்சி துணை தலைவர் கதிர்வேல், கவுன்சிலர்கள் மணி கண்டன், விஜயலட்சுமி, மாதவன், ராமலட்சுமி அய்யம்மாள், மைக்கேல்ராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முனியசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்