என் மலர்
உள்ளூர் செய்திகள்

குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
- பக்தர்கள் கரகம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
- இரவு அம்மன் வீதிஉலா நடைபெற்றது.
பாபநாசம்:
பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
அது சமயம் குடமுருட்டி ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் கரகம் காவடி எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அம்மன் தீ குண்டத்திற்கு எழுந்தருள கங்கணம் கட்டிய ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
Next Story






