search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்துறைப்பூண்டியில், பேரிடர் மீட்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    பேரிடர் மீட்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    திருத்துறைப்பூண்டியில், பேரிடர் மீட்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • சுயநினைவை இழத்தல் போன்ற நேரங்களில் எப்படி முதலுதவி செய்வது.
    • பல்வேறு உபகரணங்கள், நவீன முறைகள், குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கலைக்கல்லூரியில் 52-வது தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு காரைக்கால் காவேரிபடுகை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மலர்மதி தலைமை தாங்கினார். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மருத்துவர் இளவரசன் பேசுகையில்:-

    விபத்து, பேரிடர் காலங்களில் ஏற்படும் மயக்கம், சுயநினைவை இழத்தல் போன்ற நேரங்களில் எப்படி முதலுதவி செய்வது, இதயம் செயலிழக்கும் நேரங்களில் மூச்சு கொண்டு வருதல், எலும்பு முறிவு, ரத்த கசிவு, கண் பாதிப்பு, தீக்காயங்கள், விஷவாயு தாக்குதல், மின் தாக்குதல், பாம்பு, விஷ பூச்சிகள் கடித்தல் இவற்றிலிருந்து எப்படி தப்பிப்பது, மற்றவர்களை பாதுகாப்பது குறித்து எடுத்துரைத்தார்.

    தீயணைப்பு அலுவலர் காயத்ரி தீ விபத்தை எவ்வாறு தவிர்ப்பது குறித்து பேசினார். பின்னர், தீ பாதுகாப்பு குறித்த பல்வேறு உபகரணங்கள், நவீன முறைகள், குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பாதுகாப்பு சுற்றுச்சூழல் பிரிவு துணை பொதுமேலாளர் தியாகராஜன், தீயணைப்பு துணை பொது மேலாளர் ரமேஷ் காகிரோ, பொறியாளர் கிரிஷ் மிஷ்ரா, பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர்கள் பன்னீர்செல்வம், நந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் ஒருங்கிணைத்தார்.

    Next Story
    ×