search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள தள்ளுபடியுடன் வாய்ப்பு
    X

    அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள தள்ளுபடியுடன் வாய்ப்பு

    • காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
    • அபராத தொகையுடன்தான் புதுப்பிக்க முடியும்.

    தஞ்சாவூர்:

    அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள தள்ளுபடியுடன் வாய்ப்பு வழங்கப்படுகிறது என அஞ்சல் துறையின் தஞ்சாவூா் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் தங்கமணி தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது:

    இந்திய அஞ்சல் துறை மூலம் குறைந்த பிரீமியம் மற்றும் அதிக போனசுடன் அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    பல்வேறு சூழல் காரணமாக பாலிசி தொடங்கிய வாடிக்கையாளா்கள் தங்கள் தவணைத் தொகையை உரிய காலத்தில் செலுத்தத் தவறி விடுவதால், அந்த பாலிசிகள் காலாவதியாகிவிடுகின்றன.

    காலாவதியான பாலிசிகளை அபராத தொகையுடன்தான் புதுப்பிக்க முடியும்.

    தற்போது அஞ்சல் ஆயுள் காப்பீடு இயக்குநரகம் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்கும் வாடிக்கையாளா்களுக்கு அபராதத் தொகையில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகபட்சம் ரூ. 2 ஆயிரத்து 500 முதல் ரூ. 3 ஆயிரத்து 500 வரை விலக்கு அளிக்கும் சலுகையை அறிவித்துள்ளது.

    மேலும், விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகங்களை அணுகலாம்.

    இந்தச் சலுகை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மட்டுமே.

    இந்த அரிய வாய்ப்பை வாடிக்கையாளா்கள் பயன்படுத்தி காலாவதியான பாலிசிகளை சலுகை தள்ளுபடியுடன் புதுப்பித்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×