search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம்
    X

    மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம்

    • மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, கருப்பு கவுனி ரகங்கள் 50 சதவீதம் மானிய விலையில் கிலோவிற்கு ரூ. 12.50-க்கு வழங்கப்படுகிறது.
    • கருடன் சம்பா ரகம் பச்சையையும் குறைவாக உள்ள அரிசி வகைகளில் ஒன்று.

    பேராவூரணி:

    சேதுபாவசத்திரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் முதன் முறையாக பாரம்பரிய நெல் விதைகள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதனை விவசாயிகள் வாங்கி பயன்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சேதுவா சத்திரம் வட்டாரத்தில் உள்ள குருவிக்கரம்பை மற்றும் பெருமகளூர் வேளாண்மை விரிவாக்க மையங்களில் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை திட்டத்தின் மூலம் பாரம்பரிய நெல் விதை ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, கருப்பு கவுனி ராகங்கள் 50 சதவீதம் மானிய விலையில் கிலோவிற்கு ரூபாய் 12.50 க்கு வழங்கப்படுகிறது.

    மாப்பிள்ளை சம்பா 100 கிலோ, கருடன் சம்பா 100 கிலோ, கருப்பு கவுனி 200 கிலோ போன்ற ரகங்கள் இருப்பில் உள்ளது.

    தேவைப்படும் ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார் கார்டு நகலுடன் வேளாண்மை உதவி அலுவலர் பரிந்துரையின் பேரில் வட்டார வேளாண்மை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

    இதில் மாப்பிள்ளை சம்பா நீண்டகால சம்பா பருவரகம், 155 முதல் 160 நாள் வயதுடையது. இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகம் கொண்டது.

    சர்க்கரை நோயாளிகள், வாய் அல்சர் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    கருப்பு கவுனி ராகம் அதிக மருத்துவ குணம் கொண்டது. 155 நாள் வயதுடையது.கருடன் சம்பா ரகம்பச்சை யையும் குறைவாகஉள்ள அரிசி வகைகளில் ஒன்று. ரத்த சோகை உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்க ளுக்கு உணவாக சாப்பிட ஏற்றது. வைட்டமின், தாது க்கள் நிறைந்த அரிசி வகையாகும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×